Gate Entrance Exam

                                           

IIT & NIT பொறியியல் மேற்படிப்புகளுக்கான GATE நுழைவுத் தேர்வு – செப்.24 வரை விண்ணப்பிக்கலாம்!

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு GATE நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் வரவேற்கப்பட்டுள்ளது.

GATE நுழைவுத்தேர்வு

இந்தியாவில் பொறியியல் படிப்புகளை மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT மற்றும் IISC போன்றவைகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், இளங்கலை படிப்புகளுக்கு JEE தேர்வையும், முதுநிலை படிப்புகளுக்கு GATE என்ற நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டியது கட்டாயமாகும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும் IIT, NIT மற்றும் IISC கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான M.E, M.Tech, M.Plan உள்ளிட்ட முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக GATE (Graduate Aptitude Test in Engineering) நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய IIT கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் GATE தேர்வுகளை நடத்தும். அதன்படி இந்த ஆண்டு IIT கரக்பூர் தேர்வுகளை நடத்துகிறது. முன்னதாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான GATE நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Start Date --- 02/09/2021

Last Date --- 24/09/2021

Apply --- Click Link